tamilnadu

img

மூதாட்டியை ஏமாற்றி வீடு, நிலத்தை பிடுங்கிய பாஜக பிரமுகர் கோவை எஸ்.பி.யிடம் மூதாட்டி கண்ணீர் மல்க புகார்

கோவை, செப். 3 – பாஜக பிரமுகர் ஒருவர் படிப்பறிவில் லாத மூதாட்டியிடம் கைரேகை பெற்று விட்டு வீடு மற்றும் நிலத்தைப் பிடுங்கி வெளியே விரட்டியடித்த சம்பவம் கோவை யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரையைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (75). அருந்ததியர் இனத்தைச்  சேர்ந்த இந்த மூதாட்டிக்கு மூன்று மகள்கள்  மற்றும் ஒரு மகனும் உள்ளனர். படிப்பறி வற்ற இவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வரு கின்றனர். கண்ணம்மாளுக்கு மதுக்கரை முஸ்லீம் காலனியில் மூன்று சென்ட் நிலம் உள்ளது. இதில் ஒரு சிறிய ஓட்டு வீடு கட்டி  வசித்து வருகிறார். இந்நிலையில், இவரின் வீட்டிற்கு எதிர்புறம் பாஜக பிரமுகர் ஆறுமுகம் என்பவர் வாடகை இடத் தில் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார்.

இவர் தனியாக வசித்து வந்த மூதாட்டியை  ஏமாற்றி இடத்தை அபகரிக்கும் நோக்கத் தோடு 2018ஆம் ஆண்டு கண்ணம்மாள் இடத்தில் ஒரு பகுதியை மளிகைக்கடை  நடத்துவதற்கு ரூ.1 லட்சத்திற்கு போக்கியத் திற்கு கேட்டுள்ளார். இதற்கு கண்ணம்மாள் பிள்ளைகளிடம் கேட்டுச் சொல்வதாக கூறியுள்ளார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆறுமுகம், போக்கியத்திற்கு இடத்தை கொடு அல்லது என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் மளிகைப் பொருட்களுக்காக வாங்கிய கடனை கட்டு  என நிர்பந்தித்துள்ளார். அவ்வளவு பணத்தை என்னால் தற்போது தர முடியாது என்று கூறியுள்ளார். இதனை ஏற்காத ஆறுமுகம் படிப்பறிவு இல்லாத கண்ணம்மாளை  மதுக்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று போக்கியத்திற்கு இடம் என்று சொல்லி கைரேகை வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சென்ட் இடத்தையும், வீட்டையும் எனக்கு விற்று விட்டாய். மீதி யுள்ள 2 சென்ட் இடத்தையும் எனக்கு  விற்றுவிட்டுச் செல் என ஆறுமுகம் கூறி யுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கண் ணம்மாள், நான் உங்களுக்கு போக்கியத் திற்குத்தானே கொடுத்தேன். இப்போது விற்று விட்டதாக கூறுகிறீர்களே இடத்தை விற்க முடியாது என தெரிவித்துள் ளார். இதற்கு ஆறுமுகம் ஒருவார காலத் திற்குள் வீட்டையும், இடத்தையும் எனக்கு  விற்க வேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு என மிரட்டி சென்றுள் ளார். இதன்பின் திடீரென ஜேசிபி இயந் திரத்தை கொண்டு வந்து மூதாட்டியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளார்.  இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத் தில் மூதாட்டி புகார் அளித்த நிலையில் பாஜக பிரமுகர் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து மூதாட்டியின் மகள் ராணி வந்து நியாயம் கேட்டுள்ளார். அவரை ஆறுமுகத்தின் மகன் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மீண்டும் மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்ததில், காவல்துறையினர் கொரோனா காலம் என்பதால் தற்போது வழக்கு ஏதும் போடமுடியாது என தெரிவித் துள்ளனர். இதுகுறித்து பின்னர் நடவ டிக்கை எடுக்கிறோம்  என திருப்பி  அனுப்பியுள்ளனர்.

இதனால் சொந்த  வீடு, நிலம் அனைத்தையும் இழந்து தற்போது உறவினர் வீட்டு திண்ணையில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் புதனன்று ஆறுமுகம், மூதாட்டியின் நிலத்தில் கட்டிடம் கட்ட ஆட் களுடன் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளார். இதனை கேட்க சென்றவரை சாதியின் பெயரை சொல்லி மிரட்டி விரட்டி யுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னுடைய வீடு, நிலம் அனைத்தையும் மீட்டுத்தரக் கோரி என கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி மனு அளித்து சென்றார்.  மூதாட்டியின் அறியாமையை பயன்படுத்தி வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு நடுத்தெருவில் விரட்டிய பாஜக பிரமுகரின் செயல் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.