-மாவட்ட ஆட்சியர்
திருப்பூர், மார்ச் 6- கொரனோ பரவலை தடுக்க இருமல், தும்மலின்போது வாய், மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொள்ள வேண்டும் என திருப் பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்த கலந்தாலோ சனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில், மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் அவர் பேசும்போது தெரி வித்தாவது, கொரனோ வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத் தக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமி ஆகும். எனவே, தொடர்ந்து, காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரு கிலுள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தியோ அல்லது அரசு மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. அதே போல் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிரிமிகளை உடைய நீர்த்தி வலைகள் படிந்துள்ள பொருட் களை தொடும்போதும் கைகள் மூலமாகவும் பரவுகிறது.
இதனைத் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு இருகைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத் துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். அதே போல் சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்கள் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள சீனா விற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்க ளுக்கு செல்வதையும், விழாக் களில் பங்குபெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் யாவரும் அச்சம் கொள்ளா மல் போதிய விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிக மாக கூடக்கூடிய இடங்களில் கைகழுவும் கிருமி நாசினி போதிய அளவு வைக்க வேண் டும். மேலும், கொரனோ வைரஸ் பாதிப்பு குறித்து அவசர உதவிக்கு 24 மணிநேர உதவி எண் 011-23978046, 94443-40496, 87544-48477 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட் சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார், உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பி ரமணியன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெக தீஷ்குமார், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) சாந்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணு வர்தினி உட்பட அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.