தருமபுரி மே 11- கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து வந்த தருமபுரி மாவட்ட தொழிலாளர்கள் 62 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கர் நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பணியாற்றி வந்த னர். இந்நிலையில், முதல் கட்டமாக உடுப்பியில் இருந்து இரண்டு பேருந்துகளில் 62 பேர் திங்களன்று செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். இவர் களுக்கு அங்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. பரிசோதனை முடிவு வரும் வரையில் தருமபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.