tamilnadu

img

குன்னூர்: கனமழையால் இடிந்து விழுந்த வீடு

குன்னூர், நவ.1- குன்னூரில் புதனன்று  பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்தது.  குன்னூர் வட்டம், அதிக ரட்டி பேரூராட்சிக்குட்பட்ட மணியாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நஞ்சப்பன் (50). இவரது மனைவி சுப்பம்மாள். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த புத னன்று இரவு கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நஞ்சப்பன் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்தது. இதில் நல்ல வாய்ப்பாக எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து வியாழனன்று காலையில் அதிகரட்டி பேரூராட்சிக்கு தகவல் அளிக் கப்பட்டபோதும், அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என நஞ்சப்பன்  குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.