கோவை, ஜூலை 20- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கேரள பருவ மழையின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த நில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், 49.50 அடியைக் கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளியன்று 15.65 அடியாக இருந்த நீர்மட்டம் சனியன்று 16.40 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 72 மி.மீ. மழையும், சிறுவாணி மலை அடிவாரத்தில் 8 மி.மீ. மழையும் பதி வாகியுள்ளது. இதற்கிடையே கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடைவிதக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி யின் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்தி பல்வேறு சீரமைப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில், தென்மேற்கு பருவமழையி னால் கோவை குற்றாலம் நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.