tamilnadu

img

உணவகங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை, ஜூன் 3- கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட் சிப் பகுதிகளில் ஜூன் 8ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள உணவகங்கள் பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள், உணவகங்களின் உரி மையாளர்கள், மற்றும் அலுவலர்களு டன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மற்றும் மாநகராட்சி துணை ஆணை யாளர் ஆகியோர் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது. உணவகத் திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட் டுமே அமர்ந்து உணருந்த அனுமதிக்க வேண்டும்.  மேலும், உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலு வலர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாந கராட்சியால் வழங்கப்பட்ட வழிமுறை களை பின்பற்றாமல் செயல்படும் உண வகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித்துள்ளார்கள். இக்கூட்டத்தில், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், உணவகங்களின் உரி மையாளர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.