கோவை, பிப்.25- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி ஒன்றினை திங்களன்று ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து பாலியல் ரீதியாக ஏற்படும் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனையடுத்து புகார்கள் உறுதி யாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளை ஒன்றிணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது. மேலும் , மாவட்ட ஆட்சியரின் தலைமைக்கு கீழ் செயல்பட்டுவரும் விசாகா குழுவிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் பணிகளுக்கு செல்லும் பெண்கள் அளிக்கப்படும் புகார்களே அதிகளவில் வருகின் றதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் யார் புகார் அளித்தா லும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கு.ராசாமணி கூறினார்.