திருப்பூர், ஜூலை 19- பீஸா, பர்க்கர் போன்ற ஜங்க் புஃட்களால் (குப்பை உணவு) புற்று நோய் ஏற் படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கல்லூரி மாணவிக ளுக்கான கருத்தரங்கில் மருத்துவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20 ஆவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 9-ல் இருந்து 11ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. இதற்காக திருப் பூர் மாவட்ட அறிவியல் இயக்கம் 20 நிகழ்வுகளை இந்த மாதம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு துறைசார்ந்த அறிவியல் அறிஞர்கள், வல்லுநர்களை அழைத்து வந்து நடத்திக் கொண் டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வியாழனன்று செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் மகளிர் உடல்நலம் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்த ரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராணி ராமமூர்த்தி தலைமை தாங்கி னார். பொருளியல் துறைத் தலைவர் கிருத் திகா வரவேற்றார். டாக்டர் எஸ்.ரேணுகா தேவி மகளிர் உடல்நலம் குறித்து சிறப் புரை ஆற்றினார். அவர் பேசுகையில், இன்று கல்லூரி மாணவிகளிடையே பீஸா, பர்கர் போன்ற ஜங்க் புஃட் (குப்பை உணவுகள்) பிரபலமாக உள்ளன. அதேசமயம் புற்றுநோய் அதிக மான மக்களிடையே பரவி உயிர்க் கொல்லியாக மாறியுள்ளது.
இந்த புற்று நோய்க்கும், பீஸா, பர்கர் போன்ற உண விற்கும் தொடர்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற உணவு வகை களில் கார்சினேஜின் என்ற ரசாயணம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயணம் தொடர்ந்து நம் உணவில் சேரும்போது அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே ஜங்க் புஃட் உணவுகளை நாம் நிராகரிக்க வேண்டும். இதே போல இன்று குழந்தைகள், பெண்கள் மத்தியில் ஒபிசிடி எங்கிற உடல் பருமன் தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. இதைப் போக்க மாணவிகள் உடல் உழைப்பு, தீவிரமான விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டால் இந்த உடல் பருமன் என்பது காணாமல் போய்விடும்.உடல் உழைப்பு மட்டும் இருந்துவிட்டால் 50 சதமான நோய்கள் நம்மை அண்டாது, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறினார். இதன் பின் மாணவிகள் எழுப்பிய பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு பதில் கூறினார். முடிவில் பேராசிரியை மோகனா நன்றி கூறினார்.