tamilnadu

img

வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

கோவை, டிச. 6, கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை,  ஆகிய பகுதிகளில் அடிப்படை வளர்ச் சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி  வெள்ளி யன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை ஒத்தக்கால்மண்டபம்  பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் பகு தியில் ஒருங்கிணைந்த உட்கட்ட மைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வரும் வடிகாலுடன், தார்ச் சாலை அமைக்கும் பணிகளை வெள்ளி யன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி பார்வையிட்டார். அப்போது, அரசு விதிகளின்படியும், வெட்மிக்ஸ் மெட்டல், போன்றவை சரியான அளவீட்டின் படி அமையந்துள்ளதா என்பதை பரிசோதித்து பார்த்தார்.  இதனை தொடர்ந்து மதுக்கரை பேரூராட்சி பாரதி வீதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வடி கால் அமைக்கும் பணியினை நான்கு தினங்களுக்குள் முழுமையாக முடித் திட உத்தரவிட்டார். மேலும், இவ்வடி கால் அமைப்பது தொடர்பாக அப்ப குதி மக்களின் கருத்துக்களையும் கேட் டறிந்ததுடன், பேரூராட்சிகளில் தடை யில்லா குடிநீர், சாலை மற்றும் தெரு விளக்கு வசதிகள்  போன்றவை குறித் தும் அலுவலர்களிடம் ஆய்வு செய் தார்.  இதையடுத்து  மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டு  பள்ளிகளின் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். பின்னர், மதுக்கரை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நோயாளியிடம் மருத்துவ மனையின் தரம் குறித்து கேட்ட றிந்தார். இதில் இயக்குநர் (பேரூராட் சிகள்) துவாரகநாத்சிங், பேரூராட்சி உதவிபொறியாளர் இராமசாமி, செயல் அலுவலர் சசிகலா, ஆர்.பார்த் திபன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.