கோவை, ஜூன் 26- ஊரடங்கு காலத்தில் இதயவி யல் துறையில் ஆஞ்சியோகிரம், ஆஞ்சியோபிளாஸ்டி உள்ளிட்ட சிகிச்சைகள் அதிகளவில் வழங் கிய மருத்துவமனைகளின் பட்டி யலில் கோவை அரசு மருத்துவ மனை 3 ஆவது இடத்தை பிடித் துள்ளது. கோவை அரசு மருத்துவமனை யின் இதயவியல் பிரிவுக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப் பூர் மாவட்டங்களிலிருந்து நாள் தோறும் ஏராளமான இதய நோயா ளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதில் புறநோயாளிகள் பிரிவில் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராபி, டிரெட் மில் டெஸ்ட், ஹோல்டர் அனாலி சிஸ் போன்ற சிகிச்சை அளிக்கப்ப டுகிறது. உள் நோயாளிகளுக்கு கேத் லேப் மூலமாக ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, தற் காலிக இதய முடுக்கி (பேஸ்மேக் கர்), நிரந்தர இதயமுடுக்கி, நுரை யீரல் தக்கையடைப்பு ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இச்சூழலில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகை யில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இக்காலத் தில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட் டது.
இதனால் பல மருத்துவமனை களில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைத்துள்ள னர். இத்தகைய நிலையில் கோவை அரசு மருத்துவமனை யின் இதயவியல் பிரிவு, கொரோனா ஊரடங்கு காலத்தி லும் சிறப்பான முறையில் நோயா ளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளது. அதாவது, கடந்த மார்ச் 23ஆம் தேதியில் இருந்து மே 23ஆம் தேதி வரையிலான ஊர டங்கு காலத்தில் மட்டும் மருத்துவ மனையின் கேத் லேப் மூலம் 25 பேருக்கு ஆஞ்சியோகிராம், 11 பேருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி, ஒருவருக்கு தற்காலிக இதய முடுக்கி என மொத்தம் 37 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அளவில் ஊர டங்கின் போது அதிகளவில் சிகிச்சை அளித்ததாக கோவை அரசு மருத்துவமனைக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
முதல் இரண்டு இடங்களை மதுரை, சென்னை மருத்துவமனைகள் பிடித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை யின் முதல்வர் காளிதாஸ் கூறு கையில், “தமிழகத்தில் 18 அரசு மருத்துவமனைகளில் கேத்லேப் வசதி உள்ளது. ஊரடங்கின் போது கோவை அரசு மருத்துவ மனை இதயவியல் துறை டாக்டர் கள் சிறப்பாக செயல்பட்டு 37 பேருக்கு பல்வேறு சிகிச்சைகளை வழங்கி மாநில அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளனர். கேத் லேப் மூலம் தற்போது வரை மொத் தம் 4086 பேர் பயனடைந்துள்ள னர். இதில், ஆஞ்சியோகிராம் 2,952, ஸ்டென்ட் ஆஞ்சியோ பிளாஸ்டி 1134, நிரந்தர இதய முடுக்கி 8 பேருக்கு பொருத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கட்டான காலத்திலும் கூட சிறப்பாக செயல்பட்ட இதயவி யல் துறை மருத்துவ குழுவின ருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.