கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக பொங்கலூர் ந.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பொங்கலூர் ந.பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.