tamilnadu

கோவை நள்ளிரவில் கொரோனா நோயாளி அழைக்கழிப்பு

கோவை, ஆக.14 - கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவு முழுவதும் அழைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கிருஷ்ணா நகர் சொக்கமுத்து வீதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப் பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழனன்று இரவு 7மணிக்கு அவர் குணமடைந்துவிட்டதாக கூறி மருத்து வர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிகிச் சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்த னர். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத் திற்கும் மேலாக நள்ளிரவில் மருத்துவ நிர்வாகம் காக்க வைத் துள்ளது. இதனால் பெரும் அச்சமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகளுக்கு சென்ற நிலையில் அங்கும் அனுமதிக்க மறுத்துள்ளனர். இவ்வாறு நள்ளிரவு முழுவதும் அலைகழிப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்தே மீண்டும் இஎஸ்ஐ மருத்துவ மனையில் அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுபோன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் அலைகழிக்கப்படுவதாலே தேவையற்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. எனவே, இதுபோன்ற சம் பவங்கள் நடைபெறாத வகையில் சம்பந்தபட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.