கோவை, அக்.9– முத்தூட் பைனான்ஸ் நிறுவ னத்தின் ஊழியர் விரோத நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் புதனன்று சிஐடியு சங்கத்தினர் கண்டன போராட் டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தை தலைமை யிடமாக கொண்டு முத்தூட் பைனான்ஸ் நாடு முழுவதும் ஆயி ரக்கணக்கான கிளைகளை கொண்ட நிறுவனமாக உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின் றனர். இந்நிலையில் இங்குள்ள ஊழியர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இத னையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்து தங்களது உரிமைக் கான கோரிக்கையை முன்வைத் தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக் கான கிளை நிறுவனங்களை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மூடியுள்ளது. இதில் பணியாற்றிய ஊழியர்களை பல்வேறு பகுதி களுக்கு இடமாற்றம் செய்தது. முத்தூர் பைனான்ஸ் நிறுவனத் தின் இந்த ஊழியர் விரோத நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன இயக்கத்திற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் மண்டல தலைமையகத்தை சிஐடியு கோவை மாவட்டக்குழுவின் சார்பில் முற்றுகையிட்டு முழக்கங் களை எழுப்பினர். முன்னதாக காந்திபுரம் பகுதியில் இருந்து சிஐடியு மாவட்ட தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் ஊர் வலமாக சென்று முத்தூட் பைனான்ஸ் முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மூத்த தலைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கே.மனோகரன், கே.ரத்தினகுமார், ஏ.எல்.ராஜா, ஆட்டோ செல்வம், ஆர்.கேசவ மணி, என்.ஜாகீர் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர். முன்னதாக காலத்திற்கேற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிற்சங்க உரி மையை மறுக்ககூடாது. ஊழியர் களை இடமாற்றம் செய்த நடவ டிக்கை கைவிட வேண்டும். கோரிக்கைகள் குறித்து தொழிற் சங்கங்களுடன் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மண்டல துணை மேலாளர் ராஜேஷிடம் மனு அளித்தனர்.