tamilnadu

img

ஆகஸ்ட் 25,26ல் சிஐடியு கோவை மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

 கோவை, ஜூலை 17–  சிஐடியு கோவை மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் துடியலூரில் பேரணி பொதுக்கூட்டத்தோடு நடத்துவது என வரவேற்புக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்ட மாநாடு நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் துடியலூரில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணை தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.  இதனைத்தொடர்ந்து சிஐடியு மாவட்ட மாநாடு  துடியலூரில் உள்ள கிருஷ்ணா மஹாலில் ஆகஸ்ட் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக மாநாடு வெற்றி பெறுவதற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில் வரவேற்புக்குழுவின் தலைவராக ஆர்.கேசவமணி, செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ஆர்.வேலுசாமி மற்றும் சி.பத்மநாபன், வி.பெருமாள், எம்.கிரிஜா, எஸ்.மூர்த்தி உள்ளிட்ட 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.