கோவை, மே 19-சூலூர் சட்டமன்ற தொகுதியில்நடைபெற்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர். இதில் 79.41 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சூலூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தகனகராஜ் மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு திமுகசார்பில் பொங்கலூர் நா.பழனிசாமி, அதிமுக சார்பில் கந்தசாமி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்றாலும், அமமுக சார்பில் சுகுமார், மநீமசார்பில் மயில்சாமி, நாம் தமிழர்சார்பில் விஜயராகவன் மற்றும்15 சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 45 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. தேர்தல் பணியில் 1800 அரசு ஊழியர்களும், 3 ஆயிரத்து 423 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் ஆவர். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் பயன்படுத்தப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்படமொத்தம் 191 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் கூடுதல்கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 11.26 சதவிகிதமும், 11 மணி நிலவரப்படி 25.22 சதவிகிதமும், 1 மணி நிலவரப்படி 39.57 சதவிகிதமும்என வாக்குகள் பதிவானது. 5 மணிநிலவரப்படி 67.18 சதவிகிதத்தை அடைந்தது. வாக்குப்பதிவின்இறுதியில் 79.41 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. முன்னதாக திமுக வேட்பாளர்பொங்கலூர் நா.பழனிசாமி உள்ளிட்ட வேட்பாளர்கள் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவாக்குப்பதிவு முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தனர்.