கோவை, மே 19 - 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மோடி அரசை கண்டித்து கோவையில் மத் திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி சார்பில் எம்.ஆறுமுகம், ஐஎன்டியுசி வி.ஆர்.பாலசுந்தரம், எச் எம்எஸ் ராஜாமணி, எல்பிஎப் கே. எம்.தண்டபாணி, எம்எல்எப் மு.தியாக ராஜன், ஏஐசிசிடியு வேல்முருகன் உள் ளிட்டோர் முக கவசம் அணிந்தபடி, தனிமனித இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்த மத்திய அரசை கண்டித் தும், முதலாளிகளுக்கு சாதகமாக சட் டப்படியான வேலை நேர உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட கோரியும், பிஎப் பங்களிப்பை குறைத்த நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங் களை எழுப்பினர். இதேபோல், இந்திய தொழிற்சங் கம் மையம் (சிஐடியு) சார்பில் கோவை யின் பல்வேறு பகுதியில் உள்ள அதன் அலுவலகங்களின் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.