tamilnadu

img

தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆக.4 வரை புத்தகத்திருவிழா

தருமபுரி, ஜூலை 17- தருமபுரியில் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது.  இதுகுறித்து தருமபுரி விஜய் வித்யாஷரம் பள்ளியில் புத்தக திருவிழா வரவேற்புக்குழு தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், பாரதி புத்த காலயமும், தகடூர் புத்தக பேரவையும் இணைந்து கடந்த ஆண்டு தருமபுரி யில் புத்தக திருவிழாவை நடத்தியது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், மாணவ மாணவிய ரும் பங்கேற்று லட்சக்கணக்கான ரூபாய்க்கு நூல்களை வாங்கி சிறப் பித்தனர். தமிழகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாக்களில்  சிறந்த விழாக்களில் ஒன்றாக இத்திருவிழா திகழ்ந்தது.  இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு  புத்தக திருவிழா ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முன்னணி பதிப்பகதாரர் மற்றும் நூல் விற்பனை நிலையங்களின் 50  அரங்குகள் அமைய உள்ளன. அரங்கு கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஜூலை 26 ஆம் தேதியன்று துவக்கநாள் நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று புத்தக திருவிழாவை துவக்கிவைத்து புத்தக திருவிழா மலரை வெளியிடுகிறார்.  இந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகிக்கிறார்.

மேலும், இவ்விழாவில், தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ். செந்தில் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி தடங்கம் பெ.சுப்பிரமணி,  பென்னாகரம் பி.என்.பி.இன்பசேக ரன், பாப்பிரெட்டிப்பட்டி அ.கோவிந்த சாமி, அரூர் வி.சம்பத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத் துல்லாகான், சார் ஆட்சியர் சிவன் அருள், கல்லூரி கல்வித்துறை இணை  இயக்குனர் சகுந்தலா, முதன்மைகல்வி அலுவலர் மு.இராமசாமி, மாவட்ட நூலகர் கோ.சேகர் ஆகியோர் பங் கேற்று பேச உள்ளனர். புத்தகதிருவிழா நடைபெறும் 10 நாட்களும் பகல் 4 மணியில் இருந்து  மாலை 6 மணி வரை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளும், இலக்கிய கலந் தாய்வு கூட்டங்களும், கருத்தரங்குகள், மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், ஜூலை 26 ஆம் தேதி (வெள் ளிக்கிழமை) காகிதப்புரட்சி என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரனும், ஜூலை 27 ஆம் தேதியன்று அறிவை விரிவுசெய் என்ற தலைப்பில் வழக் கறிஞர் அ.அருள்மொழியும், ஜூலை 28 ஆம் தேதியன்று புதியன விரும்பு என்ற தலைப்பில் த.உதயசந்திரன் ஐஏஎஸ், ஜூலை 29 ஆம் தேதியன்று அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் இராம லிங்கம், ஜூலை 30 ஆம் தேதியன்று வரலாறு தவிர்க்கமுடியாது என்ற தலைப்பில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் பேச உள்ளனர்.

மேலும், ஜூலை 31 ஆம் தேதி யன்று தமிழிசைப் பாடகர் புஷ் பவனம் குப்புசாமி குழுவினரின் தமி ழிசை நிகழ்ச்சி,  ஆக.1 ஆம் தேதியன்று  பிறப்பொக்கும் உயிர்கெல்லாம் என்ற பொருளில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஆக.2 ஆம் தேதியன்று தமிழ்சமயம் என்ற பொருளில் பால பிரஜாபதி அடிகளார், ஆக.3 ஆம் தேதியன்று பெரிதினும் பெரிது கேள்  என்ற பொருளில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். இறுதிநாளான ஆக.4 ஆம் தேதி யன்று தமிழரின் மரபணுவை செதுக் கியவர்கள் என்ற தலைப்பில் நியூஸ் 18  முதன்மை ஆசிரியர் குணசேகரன் மக்கள் சபை நடத்துகிறார். இதில் ஜெகத்கஸ்பர், பீட்டர் அல்போன்ஸ், மருது செல்வராஜ், பெருமாள்மணி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். புத்தக திருவிழாவையெட்டி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கவுள்ளது. ரூ.2 ஆயிரம் புத்தகம் வாங்குவோருக்கு நூல் ஆர்வலர் சான்று வழங்கப்பட இருக்கிறது. வீட்டுக்கு ஒருநூலகம் என்ற முழக்கத் தோடு இந்த புத்தக திருவிழா நடை பெறுகிறது. நூல்களை வாங்கி பயன் பெறுமாறு தகடூர் புத்தக பேரவையும், பாரதி புத்தகாலயமும் மாவட்ட மக் களை அழைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது புத்தக திருவிழா வரவேற்புக்குழு செயலாளரும், நாடா ளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மருத்துவர் இரா.செந்தில், நிர்வாகிகள் இரா.சிசுபாலன், இராஜசேகர், கண் ணன், மு.கார்த்திகேயன் ராஜன் ஆகி யோர் பங்கேற்றனர்.