tamilnadu

img

பொள்ளாச்சி அருகே வாரச்சந்தைக்கு இடையூறாக பாஜக பேனர்

பொள்ளாச்சி,  ஜுன் 10-   பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதி யில் வாரச்சந்தைக்கு இடையூறாக பாஜக பேனர் வைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வாரத் தின் அனைத்து நாட்களிலும்  குறிப்பிட்ட ஊராட்சி  அல்லது பேரூராட்சி அனுமதி மூலமாக சந்தை கூடும். சாலை ஓர முள்ள இடங்களில் நடைபெறும் இச்சந்தையில் காய்கறி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சின்னாம்பாளையம் ஊராட்சி பகுதியில்  சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகி றது . மேலும் ஒவ்வொரு சந்தையிடுதலுக்கும் ஊராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட தொகையினை வாடகையாக வசூ லித்து வருகிறது. இந்த வாரச் சந்தை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களால் பிரதமர் நரேந்திரமோடி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாழ்த்து விளம்பரம் கட் அவுட் நீளமாக வாரச்சந்தையிடும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்களான நிலையில் பாஜக விளம்பரம் இன்றளவும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சந்தையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் உள்ளதாகவும், உடனடியாக இடையூறாக உள்ள கட் அவுட்டை   அகற்றக் கோரியும் சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சின்னாம்பாளையம் ஊராட்சி தனி அலுவ லர் கூறியதாவது,சந்தைக்கு இடையூறாக வைக்கப்பட் டுள்ள கட் அவுட் பேனர் அகற்றுவது  குறித்து ஊராட்சி சிறப்பு அதிகாரியிடம் தெரிவிக்கப்படும். மேலும் கட் அவுட் வைக் கப்பட்டுள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்குட்பட்டது அதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக் கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.