tamilnadu

img

பானி புயலின் கோரதாண்டவம்

புவனேஸ்வர், மே 4-பானி புயலின் தாக்குதலில் ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டம் உருக்குலைந்து உள்ளது. ஒடிசாவில் பானி புயலுக்கு பலியானோர் எண் ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் 14பேர் பலியானார் கள். வங்கதேசத்தில் 14 பேர் பலியானார்கள்.‘பானி’ புயல் வெள்ளியன்று ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையைகடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக் கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.இந்த புயல் வியாழனன்று ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது.வெள்ளியன்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் ரெட் அலர்ட் விடப் பட்டது. பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் விநியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வெள்ளியன்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

வீடுகளின் மேற் கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.புவனேஸ்வரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சேதமடைந்துள்ளன.கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக்,பாலசோர், மயூர்பாஞ்ச், தேன் கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் புவனேஸ்வர், மே 4-பானி புயலின் தாக்குதலில் ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டம் உருக்குலைந்து உள்ளது. ஒடிசாவில் பானி புயலுக்கு பலியானோர் எண் ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் 14பேர் பலியானார் கள்.

வங்கதேசத்தில் 14 பேர் பலியானார்கள்.‘பானி’ புயல் வெள்ளியன்று ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையைகடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக் கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.இந்த புயல் வியாழனன்று ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது.வெள்ளியன்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் ரெட் அலர்ட் விடப் பட்டது. பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் விநியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வெள்ளியன்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற் கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.புவனேஸ்வரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சேதமடைந்துள்ளன.கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக்,பாலசோர், மயூர்பாஞ்ச், தேன் கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’புயல் தாண்டவமாடியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது.சிக்கின. குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’புயல் தாண்டவமாடியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கிய போதிலும், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் மிகவும் துல்லியமாக கணித்து அளித்த தகவலின் பேரில், அதிகாரிகள் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பாக செயல்பட்டு உயிர் சேதத்தை குறைத்த வானிலை ஆய்வுமைய துறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பேரழிவு குறைப்பு முகமை பாராட்டு தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை காலை ஒடிசாவில் மிகப் பயங்கர காற்றுடன் கரையைக் கடந்த ஃபானி புயல் அப்படியே தீவிரப் புயலாக வலுவிழந்து நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கு வங்கத்தை சூறையாடத் தொடங்கியது.கன மழையுடன், சூறாவளிக் காற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சென்றது. அப்போது மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

வங்கதேசத்தில் 14 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை சூறையாடிய பானி புயலின் தாக்குதலுக்கு வங்கதேசத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.ஆந்திராவின் சில மாவட்டங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களை தாக்கிய பானி புயல்சனியன்று வங்கதேசத்தை தாக்கியது. புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வானபகுதிகளில் வசித்த சுமார் 15 லட்சம்மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கனமழையுடன் சுமார் 10 மாவட்டங்களை தாக்கிய பானி புயலால் நூற்றுக்கணக்கான கிராமங்கள்வெள்ளக்காடாக காட்சி அளிக்கின் றன. கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கில் பல கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன ஏராளமான ஏக்கர் விளைநிலங்களில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.