tamilnadu

img

குடிநீர் விநியோகம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி, ஜூன் 27- பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சியின் சார்பில் குடி நீர் விநியோகம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் அனைத்து ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தண்ணீரை எவ்வாறு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் கிராமங்களின் தூய்மை குறித்தும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், தூய்மைக் காவலர்கள், உள்ளிட்ட ஊழியர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு விநியோகிக்கவும், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது மனித உடலுக்கு நோயை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இல்லாமல் இருப்பது, குடிநீர் நிற மற்றதாக இருக்க வேண்டும். மனித உடல் நலத்திற்கு தீங்கை  ஏற்படுத்தக்கூடிய ஃபுளோரைடு உள்ளிட்ட வேதிப் பொருட்கள் இருக்கக் கூடாது என மூன்று அம்சங்களை கொண்டதாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் இருக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. தூய்மை காவலர்கள் வீட்டு குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரிக்க வேண்டும். பிறகு திடக்கழிவு மேலாண்மைக்கு கொண்டு செல்ல வேண்டும். குப்பைகளை தீயிட்டு கொளுத்தக்கூடாது. தினமும் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகம் செய்யப்பட வேண்டும். சுத்தம் மற்றும் பொது  சுகாதாரம் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்  பி.கே.மகாலிங்கம்  தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தசாமி,  ரமணி, சங்கர், சுரேஷ் மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.