tamilnadu

img

கோவை அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் மீது தாக்குதல்

கோவை, அக்.2 –  தடாகம் பகுதி கிராம சபை கூட் டத்தில் பங்கேற்க வந்த மக்கள் நீதி மையம் மற்றும் சமூக ஆர்வலர் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தடாகம் மற் றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் விதிமுறைகளை மீறி 100 அடி  வரை செம்மண்ணை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படு கிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஒரு  பள்ளத்தாக்கைக் போல காட்சி  அளித்து வருகிறது. இதன்காரண மாக மனித - யானை மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு உயிரிழப்பு கள் ஏற்படுகிறது. இந்நிலையில் 24 வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட் டத்தில் சமூக செயற்பட்டாளர் ஜோஸ்வா செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்க சென்றார். அப்போது 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் ஜோஸ்வாவை அடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தினர். அதிமுக பகுதி செயலாளர் ஜெய பால் தூண்டுதலால் இத்தாக்குதல் நடந்ததாகவும், தாக்கியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல், சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற மக் கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் காய மடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கண்துடைப்பாக கிராமசபை கூட்டங்கள்
கிராமசபை கூட்டங்களில் நிறை வேற்றப்படும் தீர்மானங்கள் எது வும் நடைமுறைக்கு வருவதில்லை என குற்றம்சாட்டி, கண்துடைப்பாக இக்கூட்டங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி ஆங்காங்கே மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட் டங்கள் நடைபெற்றது.  தடாகம் ஊராட்சியில் செய்யாத வேலைக்கு லட்சக்கணக்கான ரூபாய் கணக்கு காட்டுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதுவும் நடை முறைப்படுத்தவில்லை. இந் நிலையில் கண்துடைப்பாக கிரா மசபை கூட்டம் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தடாகம் அரசுப்பள்ளி யின் முன்பாக சாலை மறியல் சார்பில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். கேசமணி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் திமுக நிர் வாகி குமார், திமுக ஊராட்சி பொருப்பாளர் சூரியன்தம்பி, சிபிஎம் ஆர்.பழனிச்சாமி, ரவிக் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.  இதனைத்தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடை பெற்ற மறியல் போராட்டத் தையடுத்து பெரியநாயக்கன் பாளையம் பிடிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிரச்சனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லுவதாக உறுதிய ளித்தார். இதனையடுத்து போரட் டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.