tamilnadu

img

ஆத்துப்பாளையம் மக்கள் பட்டா கோரி மனு

திருப்பூர், அக்.16 - ஆத்துப்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டு மனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றோரத்தில் வசித்து வரும் மக்கள், தமிழக அரசின் அரசாணைப்படி நீர் நிலைப் புறம்போக்கில் குடியிருப் போருக்கு நிரந்தர இடம் வீடு, நிலம் வழங்க வேண்டும் என்ற அடிப்படை யில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும் தற்போது வசித்து வரும் வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீர், மின் கட்டணம் முறையாகச் செலுத்தி வரும் நிலையில் அரசு புறம்போக்கு காலி நிலத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் மாந கராட்சி முதல் மண்டலம், 2ஆவது வார்டு ஆத்துப்பாளையம் திருவள் ளுவர் நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிலத்தை வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறி னார். ஆத்துப்பாளையம் பகுதி மக்க ளுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், குருசாமி ஆகியோர் உடன் வந்து ஆட்சியரிடம் கோரிக் கையை வலியுறுத்தினர்.