tamilnadu

img

பாத்திமா லத்தீப் நிறுவனக் கொலை குற்றவாளிகளை கைது செய்!

திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ. 19 – சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மாரணத்திற்கு காரணமான பேராசிரியர்களைக் கைது செய்ய வலி யுறுத்தி திருப்பூரில் கோபாவேச ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் பாக செவ்வாயன்று மாலை கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத் துக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். இதில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீப்புக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் பா.ஞானசேகரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இப்ராகிம் ஷா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் மாதர், மாணவர், வாலிபர் மற்றும் சிறுபான்மை அமைப்புகளைச் சேர்ந்தோர் திரளானோர் கலந்து கொண் டனர்.