அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சின்னவளையம் கிராமத்தில் கடந்த 4 நாளாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.