தருமபுரி, ஜூலை 16- அங்கன்வாடி மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண் டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவ டிக்கையை மத்திய பாஜக மோடி அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் ஐசி டிஎஸ், திட்டத்துக்கு உரிய நிதி வழங்க வேண்டும். கணக்கெடுப்பு போன்ற பிறதுறைப்பணிகளை திணிக்கக்கூடாது. மேலும், 10,20,30 வருடம் பணி முடித்தவர்களுக்கு சர்வீஸ் வெயிட் டேஜ் மற்றும் பொறுப்பு பணிக்கான பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். ஐசிடிஎஸ் திட்டத்தை தனி யாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைமையில் கருப்புபேட்ஜ் அணிந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஐசிடிஎஸ் அலு வலகங்கள் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி ஐசிடிஎஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய தலைவர் எம்.அமுத வள்ளி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி. ஆறுமுகம், அங்கன் வாடி ஊழி யர் சங்க மாவட்ட தலைவர் ஏ.தெய் வானை, ஒன்றிய செயலாளர் கே.சிவ சங்கரி, ஒன்றிய துணைத் தலைவர் வி.மலர்கொடி, ஒன்றிய பொருளா ளர் ஜி.ராணி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிபேசினர். இதேபோல், நல்லம்பள்ளி ஐசி டிஎஸ் அலுவலகங்கள் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்.மங்கைக்கரசி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட இணை செயலா ளர் எம்.ராஜேந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் டி.ரேவதி, எம்.கமல நாயகி, எஸ்.மலர், பி.சுமதி, எஸ்.ஜெபா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். பென்னாகரம் ஐசிடிஎஸ் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆர்.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.லில்லி புஷ் பம், மாவட்ட துணை தலைவர் எம். ஜெயா, ஒன்றிய பொருளாளர் ஜி. பழனியம்மாள், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். காரிமங்கலம் ஐசிடிஎஸ் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.துர்காதேவி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.கலாவதி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.ஈஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் சி.கவிதா, ஒன்றிய தலைவர் நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.தமிழ் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் என்.தெய் வானை, ஒன்றிய செயலாளர் பெரு மாக்கா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.