திருப்பூர், டிச. 6 – இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்க ரின் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி இந்திய அரசியல் சட் டத்தைச் சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர். திருப்பூர் நீதிமன்ற வளாகத் தின் நுழைவாயில் அருகில் சபா பதிபுரம் சாலையில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று அண்ணல் அம்பேத் கர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. நினைவஞ்சலி உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருப்பூர் நகரத் தலைவர் ஒ.உதய சூரியன் தலைமை வகித்தார். அம்பேத்கர் உருவப்படத்துக்கு முன்னாள் அரசு வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான வி.ஞான சுப்பிரமணியம் மலர் தூவி இந் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத் தார். இதைத் தொடர்ந்து “அம்பேத் கர் வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒருநாளும் சீர்குலைக்க அனுமதியோம். அவர் காட்டிய லட்சியங்கள் ஜனநாயகம், சமதர் மம், மதச்சார்பின்மை, சமூகநீதி காக்க பாடுபடுவோம். சட்டத்தின் மேன்மையைக் காக்கவும் சட்டத் தின் ஆட்சியை நிலை நாட்டவும், அவர் வழியில் பயணிப்போம். இந்திய மக்கள் வாழ்வு உயர, ஏழை மக்கள் துயர் துடைக்க அறிவு என்ற ஆயுதமேந்தி அடக்கு முறைகளை எதிர்த்து போராடு வதுடன், அனைவருக்குமான நீதி, அச்சமற்ற வாழ்வு, அனைவ ரின் மேம்பாடு காண அம்பேத்கர் பெயரில் உறுதி ஏற்பதாக வழக்கறி ஞர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி உறுதியேற்றனர். இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன் ராம், மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.கண்ணன், மாநகரச் செய லாளர் அமர்நாத், மூத்த வழக்கறி ஞர்கள் வை.ஆனந்தன், உமர்க யான் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசி
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை கட்சியி னர் சட்டமேதை அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாளையொட்டி அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அக்கட்சி யின் மாநில துணை பொதுச்செய லாளர் அர.விடுதலை செல்வன், இரா.துரைஅரசன், ஒன்றிய