tamilnadu

img

அவுட்சோர்ஸ் மூலம் பணி நியமனம் செய்யும் முடிவை கைவிடுக

தருமபுரி, ஜூலை 16- அவுட்சோர்ஸ் மூலம் பணி நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, நிரந்தர பணி யிடங்களாக நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வேளாண்மைத்துறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது மாவட்டம் தோறும் தோட்டக் கலை துணை இயக்குனர் அலுவலகம் உருவாக் கப்பட்டது. அப்போது தோட்டக் கலைத் துறையின் மாவட்ட முழுமைக்கான நிர் வாக பணிகளை கவனிக்கவும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாக கையாளவும் தலா ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் உருவாக்கப்படும் என அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இப்பணி உருவாக் கப்படவில்லை. எனவே நிர்வாக அலுவலர் பணியிடத்தை அனுமதிக்க வேண்டும். வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலு வலகங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு கண் காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இள நிலை உதவியாளர், ஒரு தாட்சர் பணியிடம் அனுமதிக்க வேண்டும். அரசாணை எண்  100 ன்படி திருப்பூரில் புதியதாக விதைச் சான்று உதவி இயக்குனர் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இந்த அலுவலகத் திற்கு 23 பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டது. இதில் 17 இடங்கள் பணிப்பெயர்ச்சி மூலமும் ஒரு பணியிடம் விதைச்சான்று உதவி இயக்குனர் நிலையை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பணியிடங்களான தாட்சர், ஓட்டுனர், பதிவுரு  எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்கள் அவுட் சோர்ஸ் மூலம் நியமனம் செய்ய ஆணையி டப்பட்டுள்ளது. எனவே இந்த 5 பணி யிடங்களை அவுட்சோர்ஸ் மூலம் நிய மனம் செய்யும் முடிவை கைவிட்டு நிரந்தர பணியிடங்களாக நியமனம் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயவேல் தலைமை வகித்தார். மாநில துணைத் தலை வர் எம்.யோகராசு, மாவட்ட செயலாளர் ரேகா, பொருளாளர் அண்ணாதுரை ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் எம்.சுருளிநாதன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இள வேணில், அரசு மோட்டார் வாகன பார மரிப்பு ஊழியர் சங்க மாநில பொருளாளர் கே.புகழேந்தி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ஜி.பழனியம்மாள், அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலை வர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.