நூறு நாள் வேலைத்திட்டத்தில் கூலி கேட்டு
கோபி, அக். 21- கோபிசெட்டிபாளையம் அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி யாற்றிய விவசாய கூலித் தொழிலா ளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்க ளாக கூலி வழங்கப்படாததை கண் டித்து தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள தூக்க நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கொங்கர்பாளையம், ஏளூர், கணக் கம்பாளையம், கொடிவேரி, உடை யாக்கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங் கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி மன்றங்கள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட வேண்டிய கூலி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூக்க நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன்பின் உடனடியாக கூலி வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பஷிரிடம் மனு அளித்தனர். அப்போது, நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்ப தாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறு தியளித்ததைத் தொடர்ந்து போராட் டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.