tamilnadu

தொலைதூர கல்வி இயக்கத்தில் வேளாண் முதுநிலை படிப்பிற்கு சேர்க்கை

பொள்ளாச்சி, ஆக.19- கோவை வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ்  படிப்பிற்கு சேர்க்கை துவங்கியுள்ளது. இதுகுறித்து  திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தின்,  இணை பேராசிரியர் ராஜமாணிக்கம் தெரி வித்துள்ளதாவது: கோவை வேளாண் பல்கலைக் கழகத் தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கம் சார்பில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் ஆகிய மையங்களில் தென்னை விவசாயிகள்,  பட்டதாரி இளை ஞர்கள் பயன்பெறுகின்ற வகையில் பட்டய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தென்னையில் நோய் தாக்குதல் மேலாண்மை, நீர் மேலாண்மை, தென்னை நாற்றுகள் தயாரிப்பு, ஊடு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், கழிவுகளை உரமாக் குதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, ஏற்று மதி ஆகியன குறித்து கற்பிக்கப்படும். மேலும், இந்த பட்ட யப்படிப்பு  முடித்தோர், தென்னை சார்ந்த தொழில் துவங்க வங்கிகளில் 10 முதல் 15 சதவிகித மானியத்தில் கடன் பெறலாம். அதேபோல சான்றிதழ் பட்டயப்படிப்பில் விவசாயிகளுக்கு தென்னை பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்பட பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படும். இவ்வி ரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க  வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் (0422 6611229 மற்றும் 94890 51046) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.