tamilnadu

img

தருமபுரி அருகே லாரியில் தீ விபத்து

தருமபுரி, மே 7-பழைய தருமபுரியில் லாரி பட்டறையில் பழுது பார்த்துக்கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியை சேர்ந்த எட்டியாண் என்பவருக்கு சொந்தமான கனரக வாகனமான டாரஸ் லாரி. இந்த லாரியை பழுது பார்ப்பதற்காக பழைய தருமபுரியில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தியுள்ளார். அப்போது பட்டறையில் லாரி பழுதுபார்க்கும் போது டீசல்டேங்க் அருகே வெல்டிங் செய்துள்ளனர். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறிகள் டீசல் டேங்க்மீது விழுந்ததில் தீப்பற்றி எரிந்துடேங்க் வெடித்தது. இதில் லாரி முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது.இதைத்தொடர்ந்து தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் கொழுந்து விட்டு எரிந்த லாரியை அணைப்பதற்குள் லாரி முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதன் பின்னர் லாரியில் பற்றி தீயை சுமார் ஒரு மணி நேரம்போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரி எரிந்து நாசமானது.