தருமபுரி, நவ.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்டக் குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட துணைத்தலைவருமான மறைந்த தோழர் எம்.ராஜேந்திரன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தருமபுரி வட்டம், தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் எம்.ராஜேந்திரன் (57). மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழு உறுப்பினராகவும், சிஐடியு மாவட்ட துணைதலைவராகவும், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எம்.ராஜேந்திரன் திங்களன்று மதியம் சிகிச்சை பலனின்றி கால மானார். இவரின் மறைவை அறிந்து அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த தோழர் எம்.ராஜேந் திரன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிஐடியு ஆட்டோ சம் மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், பொருளாளர் ஏ. தெய்வானை, திமுக ஒன்றிய செய லாளர் ஏ.சண்முகம், அதிமுக மாவட்ட நிர்வாகி பூக்கடை முனு சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், சிஐடியு சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் எம்.ராஜேந்திரன் உடல் தடங்கம் கிராமத்தில் அடக்கம் செய்யப் பட்டன.