கோவை, செப்.19- கோவையில் இருசக்கர வாகனங்களை திருடி விற் பனை செய்து வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், ஒணாப்பாளையம், ஜெயா நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சக்திமுருகன் (48). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதியன்று இரவு தனது இரு சக்கர வாகனத்தின் அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அபுபக்கர் சித்திக் (19) என்பவர் சக்தி முருகனின் செல்போனை பறித்து தப்பிச் செல்ல முயன்றார். அங்குள்ளவர்கள் உதவியுடன் விரட்டி சென்று சக்தி முருகன் அவரை பிடித்து சாயி பாபாகாலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார ளித்துள்ளார். இதனையடுத்து இப்புகாரை பதிவு செய்து விசாரித்த காவல் ஆய்வாளர் வீரம்மாள், அபுபக்கர் சித்திக் செல் போன் பறிப்பு சம்பவத்தில் மட்டுமல்லாது சிலருடன் கூட்டு சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி அவற்றை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீவிர புலன் விசாரணை மேற் கொண்டதில் சுப்பிரமணியன், அசாருதீன், ஜாபர், பழனி வேல், அப்பாஸ், சாகுல் ஹமீது, பாண்டியராஜன் மற்றும் அஜித் ஆகியோர் இருசக்கர வாகனங்கள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்பிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும், இவர்களிடமிருந்து திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.