tamilnadu

சென்னையில் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு: 9 பேர் கைது

சென்னை, நவ. 14- சென்னை தி.நகரில் நகைக் கடை உரிமையாளரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறித்த கும் பலை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் சிவ அருள்துரை. இவ ரது கடைக்கு இம் மாதம் 3 ஆம்  தேதி சென்ற ஒரு கும்பல் 3 சவரன்  தங்க செயின் வாங்கி பின்னர் நகையில் ஒரு பவுடரை தடவி இது  போலி நகை என்று கூறி நகைக்  கடை உரிமையாளரை மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. மேலும், போலி நகைகளை விற்பனை செய்வதாக பத்திரிகை களில் செய்தி வெளியிட்டு விடு வோம் என்று கூறிய அந்த கும்பல்  ரூ.15 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், நவ.13 அன்று  மாலை 5 மணிக்கு இதே கும்பல்  மீண்டும் கடைக்கு வந்து சிவ அருள்துரையை சந்தித்தது. அப்போது, நீங்கள் கொடுத்த பணம் போதாது மேலும் 1 கோடி  ரூபாய் வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப் போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதுபற்றி சிவ அருள்துரை காவல்துறைக்கு அளித்த ரகசிய தகவலை தொடர்ந்து,  மாம்பலம் காவல்நிலைய காவலர்களுடன் துணை ஆணையர் சம்பவ இடத்துக்கு வந்தபோது காவ லர்களின் பிடியில் இருந்து 6 பேர்  தப்பியோடிவிட்டனர். 9 பேர் மட்டுமே சிக்கினர். அவர்களை கைது செய்து காவல் நிலை யத்துக்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினர். அப்போது, இந்த கும்பலை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் போலியான காவலர் அடையாள  அட்டையும், 4 பத்திரிகையாளர் அட்டையும் இருந்தது. ஜீவா என்ப வர் துப்பாக்கி வைத்திருந்தார். இவர்களிடம் இருந்து 2 கார்க ளும், 2 துப்பாக்கிகளும், 2 கத்தி களும், பெரிய இரும்பு கம்பியும்,  பணமும் பறிமுதல் செய்யப் பட்டது. தனசேகரன் திருவேற் காட்டை சேர்ந்தவர். ஜீவா வட பழனியை சேர்ந்தவர். இவர் அரசி யல் கட்சி ஒன்றில் உள்ளார். புதுப்பேட்டையை சேர்ந்த செய் யது அபுதாகிர், அமானுல்லா, எண்ணூரை சேர்ந்த ஜெகதீசன், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த முருகன், திருவல்லிக்கேணியை சேர்ந்த திருமால், பல்லா வரத்தை சேர்ந்த தண்டபாணி ஆகி யோரும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பரபரப்பான தி.நகர் பகுதியில் பிரபலமான நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.15  லட்சம் பணம் பறிக்கப்பட்டதும், துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப் பட்டதும் வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மறுபுறம், அந்த நகைக் கடை யில் போலி நகைவிற்பனை செய்  யப்படவில்லை என்றால் 15  லட்சம் ரூபாயை ஏன் கொடுக்க வேண்டும். அன்றைக்கே காவல் துறையிடம் அந்த கும்பலை பிடித்துக் கொடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.