districts

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 9 பேர் கைது

அரியலூர், மார்ச் 7 - சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத் திய சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேரை  போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (30). இவர்  15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக் காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து  சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற் றோர், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழூவூரை சேர்ந்த  சந்திரா (30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள் ளார். இதைத் தொடர்ந்து சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு  அழைத்துச் சென்று, சிறுமிக்கு குளிர்பா னத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து,  சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி யுள்ளார் என்பதும், இதற்கு சாந்தா உடந்தை யாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாக தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவைச் சேர்ந்த வினோத் (29), வி.கை காட்டி முத்துவாஞ்சேரி சாலை உரக்கடை தெருவை சேர்ந்த பிரேம் (29), நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை மணப்பத்தூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல் (58), பாலியல் தொழி லில் சந்திராவுக்கு உதவியதாக கீழப்பழுவூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிக் கண்ணன் (37), திருமானூர் தெற்கு தெரு வைச் சேர்ந்த தெய்வீகன் (49), சிறுமி பாலியல்  வன்கொடுமை சம்பவத்திற்கு, தான் பரா மரித்து வரும் வணிக வளாகத்தில் இடம் கொடுத்ததாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகிய 9 பேரை போலீசார்  ஞாயிறன்று கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த ஒருவரையும், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி  என 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிறுமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமி உடல் நலிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்  சிறுமியின் பெற்றோர், மிகுந்த மன வேதனை யில் உள்ளனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல்  துணை சூப்பிரண்டு கலைகதிரவன், துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகி யோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி,  உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.