tamilnadu

img

சேலம் கோட்டத்தில் 15 புதிய பேருந்துகள்

சேலம், ஜூலை 7- சேலம் கோட்டத்தில் 15 புதிய பேருந்து களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். சேலம் மண்டலத்திற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் 20 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5 புதிய பேருந்துகளை கடந்த 4 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில்  இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 15 புதிய பேருந்துகளை சனியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் சேலத்தில் இருந்து சிவகாசி, சென்னை, கோவை, ஈரோடு, பழனி, காஞ்சிபுரம் மற்றும் ஏற் காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் சேனாதிபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.