தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கஜா புயலால் பாதிக்கப் பட்ட உடையநாடு, பொக்கன் விடுதி, பழைய நகரம், கொன்றைக்காடு, பனங்காட்டு, ஊமத்தநாடு உள்ளிட்ட கிராமங்களில், மா, பலா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான 10,000 மரக்கன்று நடப்பட்டது. பேராவூரணி அருகே உள்ள உடையநாடு வீரியங்கோட்டை ராஜராஜன் பள்ளி மற்றும் பேராவூரணி கோக்கனட் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, பேராவூரணி பகுதியை மீண்டும் பசுமையாக மாற்றும் நோக்குடன் நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு கோக்கனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் எம்.நீலகண்டன் தலைமை வகித்தார். ராஜராஜன் பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர், வ. பாலசுப்பிரமணியன், அப்துல்கனி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் பசுமை ராமநாதன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க செயலாளர் வி.ஜெய்சங்கர், பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை, ஆசிரியர்கள் சந்திரசேகர், டாக்டர் விக்னேஷ், எம்.எம்.தங்கராசு, பொறியாளர் இளங்கோ, மணிகண்டன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் கஜா புயல் வந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் 2018 மரக்கன்றுகள் நடப்பட்டன.