tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 15 இதற்கு முன்னால்

1440 - உலக வரலாற் றின் தொடக்ககால தொடர் கொலைகாரராகக் குற் றம் சாட்டப்பட்டு, பிரெஞ்சு ராணு வத் தளபதிகளுள் ஒருவரான கில்லஸ் டி ராய்ஸ் கைது செய் யப்பட்டார். பொதுவாக நம்பப் படுவதுபோல, தொடர்கொலை கள் என்பவை, சமூக மாற்றங் கள், தொழில்நுட்ப முன்னேற் றங்களால் மனித மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் உரு வானவையாகவோ, அருகாமை காலங்களில் தொடங்கிய நிகழ்வுகளாகவோ இன்றி, வரலாறு முழுவதுமே காணப் பட்டுள்ளன. தொடர்கொலைகள், அவற்றைச் செய்தவர்கள் ஆகியவை பற்றிய தெளிவான பதிவுகள் இல்லாவிட்டா லும், அப்படியான நிகழ்வுகளே ஓநாய் மனிதன், ரத்தம் குடிக்கும் ட்ராகுலா முதலான கற்பனைகள் தோன்றக் கார ணமாயிருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

பண்டைய ரோமில், கி.மு.331இல் தொடர்ச்சியாக 90க்கும் மேற்பட்ட ரோமானியர்கள் இறந்த நிகழ்வு, தாதியர்கள் செய்த கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. கி.மு.331இல் சீனப் பேரரசர் ஜிங்-கின் மரு மகன் லியூ பெங்லி, 100க்கும் மேற்பட்டோரை, பொழுது போக்காகக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதே, தொடர்கொலைகாரர் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு! கொலை செய்யப்பட்டவர்களின் உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்ட இவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை அளிக்க வலியுறுத்தப்பட்டாலும், சொந்த மருமகனுக்கு மரண தண்டனை அளிக்க விரும்பாத அர சர், பெங்லியை அரச குடும்பத்திலிருந்து விலக்குவதை மட்டுமே தண்டனையாக அளித்திருக்கிறார். பண்டைய யேமனின் ஹிம்யாரைட் முடியரசில், ஸு ஷெனாட்டிர் என்ப வர், 100க்கும் மேற்பட்ட சிறுவர்களைத் தன்பாலினப் புணர்ச்சிக்குப்பின் கொலை செய்திருக்கிறார்.

இந்த வரிசை யில் குறிப்பிடப்படும் கில்லஸ் டி ராய்ஸ், பிரெஞ்சு ராணு வத்தில் ஜோன் ஆஃப் ஆர்க்-குடன் இணைந்து பணி யாற்றியவர், மிகவும் புகழ்பெற்றவர். மிகச்சிறந்த சாதனை புரியும் பிரெஞ்சு ராணுவ தளபதிகளுக்கு வழங்கப்படும் ‘மார்ஷல் ஆஃப் ஃப்ரான்ஸ்’ என்ற பதவியைப் பெற்ற வர். தொடர்கொலை குற்றச்சாட்டின்மீதான விசாரணை யில், சுற்றுவட்டாரத்தின் ஏராளமான மக்கள், தங்கள் பிள்ளைகள் இவரது கோட்டைப் பகுதியில் காணாமற்போன தாகக் குற்றம் சாட்டினர். ராய்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்ட தையடுத்து, தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. 140இலிருந்து 600 குழந்தைகள் வரை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்நிகழ்வு, ராய்ஸ் ஓய்வுபெற்றபோது உரிய மரியாதைகள் செய்யப்படாமை தொடங்கி, மரண தண்டனைக்குப்பின் அவரது சொத்துகள் பிரபுக்களால் பங்கிட்டுக்கொள்ளப்பட்டதுவரையான நிகழ்வுகளின் அடிப்படையில், அரசியல் அல்லது தேவா லயத்தின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருந்திருக்க லாம் என்று பிற்காலத்திய வரலாற்றாசிரியர்களால் சந்தேகிக்கப்படுகிறது.