சவுதி அரேபியாவின் உணவகங்களில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் பெண்கள் மற்றும் குடும்பத்துடன் வரும் ஆண்கள் செல்வதற்கென ஒரு வழியும், தனியாக வரும் ஆண்கள் செல்வதற்கு ஒரு வழியும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக கால் கால்பந்து ஆட்ட மைதானத்தில் நடக்கும் போட்டிகளை பார்வையிடவும், கார்களை இயக்கவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி நுழைவாயில் என்ற முறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.