ஜப்பான் ஓவியர் வரைந்த பெண் குழந்தையின் கார்டூன் ஓவியத்திற்கு ஹாங்காங்கில் ரூ. 177 கோடிக்கு ஏலம் போனது.
சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியர், பெண் குழந்தையை சார்ந்து வரைந்த ஓவியம் இடம் பெற்றது. அதில் பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போலவும், சிறுமியின் ஒரு கை மட்டும் வெளியே தெரிவது போல் இருந்தது. இந்நிலையில் அந்த சிறுமி மறைத்துள்ள கையில் என்ன வைத்திருப்பாள்? என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. இதையடுத்து ஏலம் தொடங்கிய 10 நிமிடத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 177 கோடியை தொட்டு விற்பனையானது. மேலும் நவம்பரில் நியூயார்க்கில் நடைபெறுவுள்ள ஏலத்திலும் இந்த ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.