tamilnadu

img

உலகின் விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்!

சீனாவின் ஆரோன் ஷம் என்னும் நகை தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கிய விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சீனாவின் ஆரோன் ஷம் நிறுவனம் உருவாக்கிய இந்த கழிவறைத் தொட்டி, முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது. அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்துக்கும் அதிகமான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி புல்லட் புரூஃப் எனப்படும் துப்பாக்கித் தோட்டாவால் துளைக்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கழிவறை ஷாங்காய் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாகத் ஆரோன் ஷம் நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 10 கோடி ரூபாய் ஆகும். இந்த கழிவறைத் தொட்டி உலகின் விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.