tamilnadu

img

மே நான்கு இளைஞர் இயக்கம் புரட்சிகர இயக்கம்: சீன ஜனாதிபதி பெருமிதம்

பெய்ஷிங், ஏப்.20-மே நான்கு இளைஞர் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் யுகத்தின் மதிப்பு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு ஏப்ரல் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல், ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. சீன ஜனாதிபதி ஜிசின் பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிகழ்ந்த மே நான்கு இளைஞர் இயக்கமானது, ஏகாதிபத்தியம் மற்றும் நிலப் பிரபுத்துவத்தை எதிர்க்கும் வகையில், முன்னேறிய இளம் அறிவாளர்களை முன்னோடியாகக் கொண்டு, பெரும் அளவிலான பொதுமக்கள் ஈடுபட்ட மாபெரும் நாட்டுப்பற்று புரட்சிகர இயக்கமாகும் என்று அவர் பெருமிதமாக குறிப்பிட்டார்.அதனால் தான் மே 4 ஆம் நாள் ஆண்டு தோறும் சீனாவின் இளை ஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.