tamilnadu

img

பத்திரிகையாளர் கசோகியின் மரணத்துக்கு நானே பொறுப்பு- சவூதி இளவரசர்

ஃப்ராண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பத்திரிக்கையாளர் ஜமோல் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு  என்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர். அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில், சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.

முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறிய சவுதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்த நிலையில் சவுதிக்கு எதிரான வலுவான ஆதாரத்தை ஐ.நா. வெளியிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிபிஎஸ் சார்பில் ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் வெளியாக உள்ளது. இது தொடர்பாக, ஃப்ராண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது மேற்பார்வையில் நடந்ததால் கசோகி மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவிதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.