சூடான்:
தெற்கு சூடானில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜூபா சர்வதேச விமானநிலையத்தி லிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சரக்கு விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 17 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய பயணி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பர் நைல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஜோசப் மயோம் சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா-விடம் தெரிவித்துள்ளார்.சவுத் வெஸ்ட் ஏவியேஷனைச் சேர்ந்த சரக்கு விமானம் ஜூபாவின் ஹாய் குடியிருப்பு பகுதியில் திடீரென கீழே விழுந்துவிபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் சிதறிய பாகங்கள்இன்னும் எரிந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய ஜூபா சர்வதேச விமான நிலைய இயக்குநர் குர் குவோல், பலியானோர் குறித்து எதுவும் கூறவில்லை.