சென்னை, டிச. 3 - நெல்லையில் விஜயகுமார் என்ற 25 வயது இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கைவருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷி வந்தியம் அருகேயுள்ள முனிவாழை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விஜ யகுமார் (25). மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவரும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா (23) என்பவரும் இன்ஸ்டா கிராம் வழியாக அறிமுகமாகி கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
விஜயகுமார் சிமெண்ட் தொழிற் சாலையிலும், ஜெனிபர் சரோஜா தனி யார் நிறுவனத்திலும் வேலைசெய்து வருகின்றனர். பெண்ணின் குடும்பத்தி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன முடைந்து ஜெனிபர் சரோஜா கடந்த நவம்பர் 28 அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் ஜெனிபரின் சகோதரர் புஷ்பராஜ் (எ) சிம்சன் தனது தங்கையின் காதலனான விஜயகுமா ரை திருமணம் சம்பந்தமாக பேச வேண்டும் என திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி 02.11.2024 அன்று திருநெல்வேலிக்கு வந்த விஜயகுமாரை ரயில் நிலையத்தி லிருந்து ஜெனிபரின் சகோதரர் புஷ்ப ராஜ் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரமான குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதற்கு உறு தியான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொள்ளவேண் டும். ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அரசு வேடிக் கை பார்ப்பது ஏற்புடையதல்ல. எனவே ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டத்தை இயற்றிடவேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.