tamilnadu

img

பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் பேரணி!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் 2850 பேரை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று சென்னை சிந்தாதரிப்பேட்டையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தினர். 
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பழனி, பொருளாளர் இ.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.