tamilnadu

பட்ஜெட்டில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்புக்கு கண்டனம் நாளை சிஐடியு மாநிலம் தழுவிய போராட்டம்

சென்னை,பிப்.2- மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பிப்ரவரி 4 அன்று  சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன். பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று சமர்ப் பித்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் தொட ர்ச்சியான மந்தநிலை,  வேலையின்மையின் அபாயகரமான உயர்வு, மக்களின் வறுமை பெருகுவது, விலைவாசி உயர்வு, மக்களின் துயரங்கள் அதிகரித்தல் போன்ற பிரச்சனை களில் எந்த தீர்வும் குறிப்பிடப்படவில்லை.  கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாது காப்பு என உழைக்கும் மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க எந்தவித அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் அரசின் நிதி பற்றாக்குறை யை சரி செய்ய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க அரசு முடிவு செய் துள்ளது பெரும் ஆபத்தை உருவாக்கும்.  இந்திய கட்டமைப்பிற்கு பெரும் பங்காற்றி வரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பது, ரயில்வே துறையில் தனியார் பங்களிப்புடன்  150 வழித்தடங்களை  ஒப்படைப்பது, மேலும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவ னங்களை விற்பனை செய்வது போன்ற நட வடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி யுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை சிஐ டியு கண்டிக்கிறது. நடுத்தர, சிறு-குறு தொழில்கள் பொருளா தார மந்தநிலையால் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளதையும் பணமதிப்பு நீக்க நட வடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவற்றால் நசுக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் கொள்ளா மல், பட்ஜெட் மூலம் இத்தொழில்கள் பயன டைவதில் சிறப்பு அக்கறை இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. நாட்டில் நிலவும் தொடர்ச்சியான பொரு ளாதார மந்தநிலை மத்தியில், உள்கட்ட மைப்பு மற்றும் வேளாண்மையில் பொது முத லீடுகளை அதிகரிப்பதன் மூலமும், சமூக நல சேவைகளின் கணிசமான விரிவாக்கம் மற்றும் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்பை அதிகரிப்பதில் நேரடி தலையீடு செய்வதன் மூலமும் வரவுசெலவுத் திட்டம் நேரடியாக அளவிடப்பட்டிருக்க வேண்டும். இந்த கருத்தை பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்கூட்டத்தில் நிலைமையை சீரமைக்க   அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும் முன்வைத்தும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், பெருவணிக/ கார்ப்பரேட்/ பெருமுதலாளி களுக்கு அனுகூலங்கள் அளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள் மற் றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளதை கண் டித்தும், எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதி ராக போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக வும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வலி யுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி மாநிலம் முழு வதும் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங் கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.