tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு வந்த பெண்களிடம் தகாத வார்த்தையில் திட்டிய ஊராட்சி செயலாளர்

பெரம்பலூர், ஏப்.4-பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் தொண்டமாந்துறை ஊராட்சி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நூறு நாள் வேலை கேட்டு வியாழனன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், வரும் 6-ம் தேதி முதல் வேலைவழங்குவதாக உறுதியளித்தனர், அதைதொடர்ந்து பெண்கள் உள்பட அனைவரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு தொண்டமாந்துறை ஊராட்சி செயலாளர்(பொ) பாலுசாமி வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர், நூறு நாள்திட்ட வேலைக் கேட்டு வந்த பெண்களைபார்த்து, என்னை ஆலோசிக்காமல் இங்கு ஏன் வந்தீர்கள் என தகாத வார்த்தையில் திட்டி பேசினராம். மேலும் தள்ளாடிய நிலையில் இருந்த பாலுசாமியின் வேஷ்டி அவிழ்ந்து விழுந்ததாம். இதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாத பாலுசாமி, நீங்கள் என்னிடம் தான்சம்பளம் வாங்க வேண்டும். நீங்கள் எப்படி வேலை செய்வீர்கள் என்பதை நான் பார்த்து விடுகிறேன் என மிரட்டி தகராறு செய்தாராம். 


2017-18 ஆம் ஆண்டில் 40 நாட்கள், 2018-19 ஆம் ஆண்டில் 27 நாட்கள் எனகடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறும் 67 நாட்கள்மட்டுமே வேலை வழங்கியதாகவும், 133 நாட்கள் வேலை இல்லாமலும் சட்டக்கூலி முழுவதும் வழங்காததாலும் ஒவ்வொரு ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களும் 40 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் இழப்பை சந்திந்துள்ளதாகவும், 2019-20 ஏப்ரல் மாதம் வரைஇந்த ஆண்டு புதிய கணக்கு துவங்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்றுஅதிகாரிகள் வேலை வழங்குவதாக உறுதியளித்த நிலையில் அங்கு குடிபோதையில் வந்த ஊராட்சி செயலாளர் பாலுசாமி வேண்டுமென்றே தகாதவார்த்தையில் பாலியல் ரீதியாக பெண் களை இழிவுபடுத்தி பேசியுள்ளார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கிராம மக்கள் எதிர்பார்க் கின்றனர்.வேலை கேட்டு வந்தால் பெண்களைபாலியல் ரீதியாக இழிவாக பேசுவதா? தேர்தல் நடத்தை விதிக்கும், தேசிய ஊரக வேலை திட்டத்திற்கும் எந்த சம் பந்தமும் இல்லை. சட்ட அந்தஸ்து பெற்ற இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி அனைவருக்கும் வேலைவழங்க வேண்டும். தமிழக முதல்வர்200 நாட்கள் வேலை தருகிறேன் என்றும்,அமைச்சர் செங்கோட்டையன் வருடத்தின் 365 நாட்களும் வேலை தருகிறேன் என்றும் பேசி வருகின்றனர். ஆனால் இங்கு 100 நாட்களே வேலை தரவில்லை. 27 நாட்கள் மட்டுமே வேலைவழங்கியுள்ளனர். இதே போன்று வெங்கலம் ஊராட்சியிலும் போராட்டம் நடைபெற்று பின்னர்வேலை வழங்குவதாக உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.