தாம்பரம், பிப்.8- கண்டோன்மென்ட் பல்லாவரம் இரண்டாவது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சீதா (36) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை சேத்துப்பட் டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாள ராக பணி செய்து வருகிறார். இவர் வெள்ளியன்று மாலை பணிமுடித்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பல்லாவரம் கார்டன் சாலை பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த வாலிபர் மருத்துவரிடம் அவதூறாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர் கீதா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படை யில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சி கள் மூலம் அந்த வாலிபரை தேடினர். பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திரி சூலத்தை சேர்ந்த ஆரோக்கி யராஜ் (38) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையி னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.