அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 31- சுற்றுச்சூழல் தாக்க (இஐஏ 2020) மதீப்பீடு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வெள்ளியன்று அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ல் மாற்றம் செய்து, புதிய சுற்றுச் சூழல் கொள்கையை உருவாக்கி சுற்றுச் சூழல் தாக்க வரைவு மதிப்பீடு -2020 என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், புதிய சட்ட வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை யில் முற்போக்கு இயக்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை, காந்திபுரம் பெரி யார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, இந்த சட்டத்தை அமல்படுத் தினால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும். இச்சட்டம் பெரும் முதலாளளிகள் பயன்பெறும் வகையில் இருப்பதுடன், எந்தவித அனுமதியும் பெறா மல் தொழிற்சாலைகள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்ய வழி வகுக்கும் என குற்றம்சாட்டினர்.