tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்...

ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டுஜுன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியவிடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். இவர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதைமாற்றி தமிழ்நாடு என்ற பெயர் வைக்கும்போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை தமிழகத் தலைநகராகத் தக்க வைக்க போராடினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; ஆனால்திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை,பீர் மேடு, தேவிகுளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தது. 

‘செங்கோல்’ என்ற ஒரு வார இதழையும் தமிழ் முரசு என்றஇதழையும் நடத்தினார். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். இந்த விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் இவருக்கு ‘டாக்டர்’ பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன. மதுரைப் பல்கலைக் கழகம், ‘பேரவைச் செல்வர்’ என்றபட்டம் வழங்கியது. மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்தது.இவர் தமிழக சட்ட மேலவையின் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1995 அக்டோபர் 3 அன்று மறைந்தார். 

பெரணமல்லூர் சேகரன்